ஐஐஎஸ்ஸி

இன்னும் சில ஆண்டுகளில் நூறாண்டு கொண்டாடப்போகும் ஐஐஎஸ்ஸி பரவலாக அறியப்பட்ட ஐஐடி களைப்போன்ற கல்லூரி அல்ல. அது அடிப்படையில் ஒரு அறிவியல்-தொழில்நுட்ப ஆய்வு மைய்யம். முதலிலிருந்தே கற்பித்தல் மட்டுமன்றி ஆய்வு செய்வதும் அதன் முக்கிய பணிகளில் ஒன்று. நான் அங்கே இளநிலைப் பொறியியல் பயிலச் சென்றேன். (அப்போது இளநிலைப் பொறியியலும் இருந்தது. பின்னர் நீக்கிவிட்டார்கள்). கோவையில் மூன்றாண்டுகள் படித்திருந்தாலும் சரியான கிராமத்தானாகத்தான் அங்கே சென்றேன். அங்கிருந்த ஆசிரியர்-ஆராய்ச்சியாளர்-மாணவர் குமுகம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் கன்னடத்தவர். அப்போதைய ஐஐஎஸ்ஸி கிராமத்தைப் போன்றே இருந்தது. நகரிலிருந்து வெளியே, மரங்கள் அடர்ந்து சூழ்ந்த ஒரு வளாகம். மிக இயல்பாகப் பேசும் பழகும் ஆய்வாளர் தொழிலாளர் கூட்டு. சேர்ந்த ஒரே வாரத்தில் அப்போதைய இயக்குனராக இருந்த சதீஷ் தாவன் தம் இல்ல விருந்தொன்றுக்கு இளநிலைப் பொறியியல் பயிலச் சேர்ந்திருந்த புது மாணவர்களில் சிலரை அழைத்திருந்தார். சதீஷ் தாவன் இந்திய வானாராய்ச்சி மற்றும் ஏவுகணை ஆராய்ச்சியின் தந்தை என அறியப்படுபவர். மாணவர்கள் எங்களுக்கு எப்படி இருக்கும். மிக மகிழ்ச்சியுடன் ஐஐஎஸ்ஸிக்கு எங்களை வரவேற்றார். பல சுவையான கதைகளைச் சொன்னார். மிகப்பெரும் குடும்பமாகவே அந்நிறுவனம் இருந்தது. ஆய்வகங்கள் எல்லாம் அடையா நெடுங்கதவுடன் தான் இருக்கும். துறை வேறுபாடெல்லாம் கிடையாது. எந்த ஆய்வகத்திலும் நாங்கள் நுழைந்து நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம். மாணவர் விடுதிகளும் துறைப்படியோ, படிக்கும் பட்டப்படியோ பிரி¢க்கப் பட்டவை அல்ல. அனைவரையும் கலந்தே போட்டிருப்பார்கள். ஆய்வு நிலை மாணவர்களும் முதலாண்டு இளநிலை மாணவர்களும் அறைகளைப் பகிர்ந்து கொள்வது சாதாரணம். வளாகத்தின் சுற்று மதில் சுவர் ஏறக்குறைய இரண்டடி உயரத்துக்கு பிரமாண்டமாக இருக்கும். அதை தாவிக்குதித்துத் தான் நாலாப்புரங்களிலும் திரைப்படம் பார்க்க செல்லுவோம். கேட்டைப்பூட்டி கட்டுப்பாடெல்லாம் கிடையாது. சோம்பேரித்தனம்தான். நூலகத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். உள்ளே போனால் நாள் முழுவதும் படிக்கலாம். ஏதோ இந்திர மண்டலத்தில் இருப்பது போலத்தான் இருந்தது. பிறகு வருடங்கள் செல்லச் செல்ல பல பழைய துறைகள் மூடப்பட்டன. பல புதுத் துறைகள் எங்கும் நிறைய கட்டடங்கள் என துரிதமாக வளர்ந்து விட்டது. இப்போது சென்றால் எல்லாத்துறைகளிலும் இந்திய, பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் அவர்களுக்கேயான ஆய்வுச்சாலைகள் காணப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியாது. மேலும் பொக்ரான் அணுவெடிப்பை அடுத்து முன்னேறிய நாடுகள் போட்ட தடையால் ஐஐஎஸ்ஸியும் மெல்ல மெல்ல ஆய்வகங்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் ஐஐஎஸ்ஸி வளாகத்தினுள்ளே நுழைவது கடினமானதல்ல. இப்போதும் எல்லோருக்கும் அனுமதி தருகிறார்கள். சென்ற வார இறுதியில் பெங்களூரு சென்றபோது ஒரு பழைய புத்தகக்கடையில் என் செல்பேசியைத் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு அருகிலிருக்கும் ஐஐஎஸ்ஸி வளாக போலீஸ் நிலையத்தில் தான் சென்று முறையீடு கொடுத்தேன். காவலர்கள் சிரித்துக் கொண்டே ஓல்டு ஸ்டூடண்டுதானே சார் நீவு என்று காகிதம் கொடுத்தனர். அதற்கு அடுத்த கட்டடம்தான் டாடா ஆடிட்டோரியம். இன்றைய இந்தியாவின் சொந்த அறிவில் கட்டப்பட்ட அரசுத்துறையைச் சேர்ந்த அணுவியல் மற்றும் வானாராய்ச்சி நிறுவனங்களின் இயக்கம் ஐஐஎஸ்ஸியின் அறிவியல்-தொழில்நுட்ப ஆக்கத்தினாலே பெருமளவு சாத்தியமானது என்று சொன்னால் அது மிகையாகாது. இது இந்தியாவின் மூளையை நேரடியாகத் தாக்கும் பயங்கரவாதம். பெங்களூரு அதன் வளர்ச்சிக்காக கண்காணிக்கப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். என்ன ஒரு சண்டைவந்தால் பாகிஸ்தான் ஒரு அணுகுண்டு போடும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே இருந்தோம். ஆனால் அது பயங்கரவாதத்தினால் நேரடியாகத் தாக்கப்படும் என்று நம்பவில்லை.இன்று சென்னையில் இருக்கவே பிடிக்கவில்லை. உடனே செல்லவேண்டும் போல் இருக்கிறது.
. இப்போது மோசமான நிலையில் காயப்பட்டிருக்கும் விஜய் சந்த்ரு, கணிப்பொறி இயல் துறையில் பேராசிரியர். கணினி வரைவியல் துறையில் முக்கியமான சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதி உள்ளார். ACM கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆராய்ச்சி இதழை படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அபயங்கருடன் சேர்ந்து கணித அடிப்படையில் தேர்ந்த கட்டுரைகள் எழுதியவர். பேச பழக மிக இனிமையானவர். நண்பனின் ஆசிரியர் என்ற முறையில் சில முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். சிம்ப்யூட்டர் வடிவமைத்த குழுவில் ஒருவர். ஸ்றேண்ட் ஜெனோமிக்ஸ் எனும் இந்தியாவின் சிறந்த உயிரியல்கணினி நிறுவனங்களில் ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார். மிக அதிர்சியூட்டும் செய்தி இது.

It is later than we think.

பூச்சிகளின் அரட்டைImage hosted by Photobucket.com


"என்னோடு கல்யாணம் பண்ணிட்டு புத்துக்கு வா, உன்னை  ராணி மாதிரிப்
பாத்துப்பேன்னு சொன்னா இப்பிடி நம்பாம முழிக்கிறியே ..."பூச்சிகளின் அரட்டை

சுட்டி


அடையாளம், அடக்குமுறை, அதிகாரம் -3

அடையாளம்,அடக்குமுறை, அதிகாரம் 2

அடையாளம்,அடக்குமுறை, அதிகாரம் -1


குழு அடையாளங்களை முற்றும் துறத்தல் என்பதே தனிமனித சுதந்திரத்தின் முதல்படி. ஆனால் அனைத்து உறவுகளும் ஏதாவது ஒரு படியில் குழு அடையாளங்களாலேயே கட்டப்படும் இக்காலத்தில் எது மற்றதிலும் சிறந்தது என்பது கணக்கிலா வாதங்களுக்கான வழியைத்தான் அமைக்கிறது. அனைவருக்கும் தம் நம்பிக்கையை ஆக்கிக்கொள்ளவும், அதை மற்றவர்க்குப் பரப்பவும் நமது மக்களாட்சியும் சட்டமும் வகைசெய்கின்றன. பிறரை எள்ளுவதற்கும், அவரளவில் அவர்கள் பயிலும் நம்பிக்கைகளை புறந்தள்ள அவர்களை கருத்து ரீதியில் நெருக்கடி கொடுக்கவும் சட்டம் வகை செய்யவில்லை. அனைத்து அடையாளங்களையும் அதனதன் உரிமையாளர்கள் என்று கருதப்படும் அவ்வக்குழுக்களே பேண வகைசெய்யும்போது மற்ற குழுக்களின் அடையாளத்தையும் அதைக்காக்க அவர்களுக்கிருக்கும் உரிமையையும் மீட்டுத்தருவதே உண்மையான நிலைபாடாக இருக்கமுடியும். இது தனிமனிதரிடமிருந்து தொடங்கி குழுக்களின் அனைத்து அலகுகளிலும் பாதுகாக்கப் பட நம் கருத்து நிலைகலைகளை எடுப்பதே உண்மையான தாராளவாதமாக இருக்கமுடியும். அடையாளங்களை வைத்துக்கொள்ள அனைவருக்கும் இருக்கும் உரிமையை முதலில் மீட்டெடுப்போம். அவ்வடையாளங்கள் எவ்வளவு அபத்தமானதாக இருந்தாலும். தமிழக அரசியலும் ஒரு திருப்புமுனைக்கு வந்திருப்பதாகவே படுகிறது. தமிழக அந்தணர்கள் தமிழர்கள் அல்லர், சமஸ்கிருதமும் தமிழும் தமக்குள் சற்றும் தொடர்பே இல்லாத தனித்துவமான மொழிகள் என்றெல்லாம் நிரூபிக்கப் படாத கருதுகோள்களின் மீது கட்டப்பட்டு நடத்திய அரசியல் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது. இவற்றின் எச்சங்களை இன்னும் காட்டுபவர்களை கடந்து செல்வதே சரியான நிலை. மக்களின் உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்ள இனியாவது காலம் வரும் என்று நம்புவோம். மாநிலமே நீரில் தத்தளிக்கும்போது இதை எழுதிக்கொண்டிருப்பதும் ஒருவிதத்தில் தேவையற்ற செயல்தான்.

அடையாளம், அடக்குமுறை, அதிகாரம் -2

இன்றைய இந்திய நவயுவர்கள் இடையில் நாட்டுப் பற்றோ, பூடகமாக வெளிப்படுத்தும் மத, சாதிப்பற்றோ kosher அடையாளங்களாக மாறியிருக்கின்றன. இவை ஒரு பெருங்குழு அடையாள சமனப்படுத்தலாக, குறிப்பான்களாகவும் இருக்கின்றன. இவர்களின் தாராளத்துவக் கதையாடல்களில், இதற்கு நேர் எதிர் அலகில் உள்ள நாட்டின் பழங்குடிகள் பண்பாடு, வாழ்முறைச் சடங்குகளைப் பற்றிய நியாயப்படுத்தலும் காணப்படுகிறது. இப்படி இரு துருவ அலகுகளிலும் பயிலும் அடையாளங்கள் நியாயமானவையாகவும், சரியானவையாகவும், நாட்டின் கூறுகளாகவும் காணப்படும்போது, இவையிரண்டின் இடை அலகில் பயிலும் மொழி அடையாளம் மட்டும் ஏன் இப்படி ஒரு எதிர் அடையாளமாக குறிக்கப்படுகிறது? தவிர்க்கக்கூடியதாகவும், சிறுமைப்படுத்த தகுதியானதாகவும் இருக்கிறது. ஒருவேளை அது ஒன்றுதான் நியாயமான உள்ளுறை அடையாளமோ என்ற அச்சத்தினாலா? சமீபத்தில் பெங்களூரில் நடந்த பாடல்விழாவின் போது கன்னடப் பாடல்களைப் பாட முடியாமல் மறித்துக் கூச்சலிட்ட கும்பல் கற்றறிந்த, இன்றைய நாடுதழுவிய நாகரிகக் கும்பல்தானே? தாம் இருக்கும் இடத்தின் மொழியைக் கற்காவிட்டாலும் அதை எள்ளக்கூடிய மனநிலை பாசிச மனநிலை அல்லவா? இதற்கு எதிர்வினையாக எதை எதிர்பார்க்க முடியும். நாளை உடையும் கண்ணாடிகளும் சாலையில் சிந்தும் ரத்தமும் விதைக்கப் படுவது யாரால்? மக்கள் தம் அடையாளாங்களாகத் தேர்ந்தெடுப்பவை அவர்களின் சுதந்திரம். அவை முட்டாள்தனமாக இருந்தாலும். நான் நாத்த்கன் என்று பெயருக்கு வைத்துக்கொண்டாலும், எனக்கு என் நம்பிக்கையைப் பரப்ப சுதந்திரம் அளித்தாலும், பிறரிடம் கடவுள் இல்லை என்று சொல்லும் சுதந்திரமும் எனக்கு இருக்கிறது என்று கொள்ளலாம். ஆத்திகர்களிடம் கடவுள் இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளரிடம் நீ கடவுள் மீது வைத்திருக்கும் உன் தனிப்பட்ட நம்பிக்கை பித்தலாட்டமானது, அது பொய் என்று கூறுவது கருத்து ரீதியான வன்முறைதானே. அதைச் சொல்ல ஒருவருக்கும் ஒரு சுதந்திரமும் கிடையாது. முட்டாள்தனமாகவேனும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் கற்பு என்று ஒரு கோட்பாடு உண்மையானதாக கருதப் பட்டு போற்றப் பட்டும் வருகிறது. இதன் ஊற்று பெண்ணடிமைத்தனம் என்று நாம் சொன்னாலும் கூட - தனிப்பட்ட முறையில் என் நிலையும் இதுதான். சங்ககாலம் கூட வேறுவிதமானதுதான். இப்படிப்பட்ட நிலையில் எனக்கு கற்பு போன்ற கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பதற்கும் அதை நம்பிக்கொண்டிருப்பவர்களிடம் உங்களுக்கெல்லாம் கற்பு இருக்கிறதா என்று கேட்கும் மனநிலைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. கடவுள் பொய் என்பதற்கும், நீ கொண்ட கடவுள் நம்பிக்கை பொய்யானது என்று ஒரு ஆத்திகனை கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போலத்தான் இது. பிறரின் நம்பிக்கைகளை மறுப்பது என்பது வேறு. அதனை எள்ளி அவர்களின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குவது கருத்து வன்முறையின் உச்ச கட்டம். It is high time this liberalist terror is called its bluff. Liberalism does not necessitate showing scant regard for the dignity of the other. ஆனால் இதற்குப் பிரதிவினையாக நடக்கும் நாடகங்களும் நடத்தப்படும் போராட்ட நிகழ்வுகளும் பண்பாட்டு அபத்தத்தின் உச்சத்தையே தொட்டிருக்கின்றன. இதில் பமக, விசி இரண்டும் புரட்சிகர அரசியலின் கேலிச்சித்திரங்களாகவே தம்மைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதைக் கொண்டு அகில இந்திய ஊடகங்கள் (இன்றைய அவுட்லுக்கில் இக்காரணத்தால் இனி பன்னாட்டு மூலதனம் தமிழகத்துக்கு வருமா என்று கூட ஒரு வரி இருக்கிறது!) ஏதோ தமிழ் அடையாள காட்டுமிராண்டிகளுக்கும் நாகரிக இந்தியக் கனவான்களுக்கும் இடையில் நடைபெறும் இன்னொரு போராகவே இதைக்காட்டுகின்றன.

அடையாளம், அடக்குமுறை, அதிகாரம்

தனிமனிதனின் அடையாளங்கள் என்றும் பிறரை வெருட்டுபவை. அவனுடன் அண்மித்த, அவன் சார்ந்திருக்கும் இனக்குழுவின் குழுநன்மைக்கு ஊறாக கற்பிக்கப் படுபவை. தமிழகத் தமிழரின் தற்போதய அடையாளச் சிக்கல் நடிகர்கள் வடிவத்தில் வருவது ஒரு இடைச்செய்திதான். அதேசமயம் இதைவைத்து தனிமனித கருத்துச் சுதந்திரம் என நடக்கும் விவாதங்களில் நாம் சொல்ல ஒன்றுமில்லை. இது வெளிப்படையாக பொதுப்புத்திக்கே அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் விதயம். அதனாலேயே அதை அசட்டை செய்யக்கூடியது சரியல்ல என்றாலும் இத்தனை தீர்மானமாக நடக்கும் இந்த விவாதங்கள், இதே நடிகர்கள் இந்து/முஸ்லிம்/கிருத்துவ மதக்குழுவைப் பற்றியோ இந்தியப் பண்பாடு என்று வியந்து போற்றப்படுவதைப் பற்றியோ முழு நாட்டு மக்களையும் முன்னிறுத்தி ஒரு கருத்து சொன்னால் எத்தனைபேர் அந்த சுதந்திரத்துக்கு சிந்தனை அணிசேர்வார்கள் என்பது சந்தேகமே. ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி மறைத்த ரஷ்யப் பொம்மைபோல் இவ்வடையாள அடுக்குகள், யார் எவர்மீது எதைக்கொண்டு அடக்கமுயல்கிறார்கள் என்பதையே சுட்டும். அடையாள மற்றுப்போய் உலகக் குடிமகனாகவோ, மனிதப் பிரதிநியாகவோ, அல்லது மனிதன் மட்டுமல்ல உலகின் அனைத்து உயிருள்ளவற்றிற்கும் சகஉயிரணு பங்காளனாகவோ தன்னைத்தான் உயர்த்திக்கொண்டு கருத்துப் பின்னல் சமைப்பதே எப்போதும் வசதியானது. ஏதாவது ஒரு அடையாளத்தை தம்மேல் வரித்துக்கொண்டு தம்மை அச்சுறுத்துவதை கேள்விகேட்பவர்களை கேலிசெய்து பேச்சற்று போகச்செய்து தம்மை அவரினும் உயர்தளத்தில் அமர்த்திக்கொள்ள வகை செய்வது. 'இந்தத் தமிழ் அடையாளம்தான் என்ன' என்ற கேள்வியில் தமிழ் என்ற இடத்தில் வேறெந்த அடையாளச்சுட்டியைப் போட்டாலும் அதற்கு வரும் பதில் சிரிப்புக்கிடமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து அடுத்த தளத்தில் பேசுபவரிடம் பேசலாம். மற்றபடி வசதிக்கேற்ப அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளினும் ஒருமாற்றும் குறையாமல் நடக்கும் கருத்துப் புல அரசியலிலும் பங்குபெற மறுப்பதே இப்போது ஒரே வழியாக இருக்கிறது. கட்சிசார்ந்த ஊடகச் சிந்தனை குறுக்கும் மூளைச்சலவையை சரியாக கவனிக்கும் ஒருவரே பெரும் பத்திரிக்கைகள் தம் விருப்பப்படி பரப்பும் இனச்சார்புகளையும், ஆதிக்கச் சார்புகளையும் பொருட்படுத்தாமல் நகர்ந்துவிடலாம். அது வசதிக்கேற்பவே நடைமுறையாகிறது. மாற்றுச் சிந்தனைகள் என்றால் அது எவரிடத்திலிருந்து வந்தாலும் அதனை வெளியிடும் புலத்தில் நம்பிக்கையுடையவர்களுனேயே கருத்துப் பரிமாற்றம் இயல்பாக நடக்கமுடியும். இன்று அணிதிரண்டு இருப்பவர்களில் இருபாலாரிடமும் பலரிடம் இதைக்காண முடியவில்லை.

எறிந்த விமானங்கள்

--

Image hosted by Photobucket.com
நிலவு போய்ச்சேர எறிந்த விமானங்கள்
உள்/வெளி பேதம் மறந்து அலையும் கனப்பரப்பு.
கற்கள் பெயரக் கலைந்தோடும் எறும்பின் கூட்டம்.
தழலும் கருவேலம் புகையும்
குழல்வழி சென்று நிரப்பிய அம்மாவின் மூச்சுப்பைகள்
போல்
முப்பரிமாணத்தில் விரியும் இம்மாநகர்
இன்னும் எவ்வளவு கொள்ளும்?
படர்சிதைவுச் சமவெளியின் அப்பால்
மலைச் சரிவுகளில் அளையும்
ஊர்திகளின் தொலைமுடுக்குப் பொறிகள்
இயக்க வரிசையில் நிற்கும் நான் கேட்கிறேன்:
உயிர்வளியை அடக்கிச் செல்லும் குழல் வர்த்தகா
வேகும் அரிசியின் மணம் போன்றதா நிணமும்.--

ஒரு மாலை

" ஒரு மாலை இள வெய்யில் நேரம்
அழகான இலையுதிர்க் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே ..."
= தாமரை.


இந்தக்காலத்தில் திரைப்படப் பாடல் இப்படி எழுத தெளிவும், துணிவும் வேண்டும். முழுப்பாடலும் இப்படித்தான். காக்க காக்கவிலும் நன்றாக எழுதியிருந்தார் தாமரை. திறமையுள்ள இளம் கார்த்திக்கின் சரியான தமிழ் உச்சரிப்புடன், ஹாரிஸ் ஜெயராஜ் சீரான ஒரு பாடலைப் போட்டிருக்கிறார். ஒரு நல்ல பாடல் தருவதற்கு வார்த்தையிலும், குரலிலும், இசைக்கோர்ப்பிலும் எல்லோரையும் சிரமப்படுத்தும் கழைகூத்தாடித்தனம் எதுவும் தேவையில்லை என்பது மீண்டும் நிரூபணமாகிறது.
(ஹாரிஸ் ஜெயராஜிடம் பழைய crosby-stills-nash and young மற்றும் supertramp போன்ற குழுக்களின் பாதிப்பு தெரிகிறது. இந்தப் பாடலைப்பற்றியல்ல, பொதுவாக கண்டது. மேலும் இருக்கவே இருகிறது தற்போதைய 'urban sound')

http://www.musicindiaonline.com/p/x/iVvgqTJOjt.As1NMvHdW/

கத கேளு கத கேளு ...தமிழ் மணம் வேண்டாம் என்று
தள்ளாமல் இருக்க இந்த பில்லர் செய்தி. எழுத்துக்களை மறைக்கும் முயற்சி
சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவேண்டும். எப்படி தமிழ்மணம்
தீர்மானிக்கிரது? வரிக்கணக்கா?


Image hosted by Photobucket.com


"what are you staring at? It is six days already and this damned design
says we got only one day left".+

கத கேளு கத கேளு ...

அப்படி இப்படி பேசி கடைசியில் நிறைவேற்றியே விட்டார்கள். வாழ்க.

சுட்டி1சுட்டி2+